Followers

Sunday, December 16, 2007

என் மதத்தின் அற்பத் தன்மையைப்பற்றி வாய் திறக்காதே - கத்தி போயி வாலு வந்தது


ராமன் கதை, புளுகு, புரட்டு இன்னும் ஓயாத நிலையில் கிருஷ்ணன் லீலா விநோத சர்ச்சையைப் பார்ப்பன, இந்து மதவெறி ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குகின்றன.

சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக பல நாடுகளும் பல உத்திகளைக் கையாள்கின்றன. அந்தந்த நாடுகளின் பாரம்பர்யப் பழம்பெருமைகளைப் பறைசாற்றிப் பயணிகளைக் கவர்ந்திழுக்கின்றன.

தாய் லாந்தின் உடம்பு பிடித்து விடும் (மசாஜ்) பெண்கள், பாலித்தீவின் நடனமாடும் நங்கைகள் என்று கவர்ச்சி விளம்பரங்கள், கீழை நாடுகளுக்குச் சுற்றுலா பயணிகளைச் சுண்டி இழுக்கும் வகையில் கையாளப்படுகின்றன.

புண்ணிய பாரதப் பூமிக்கு என்ன அந்த வகையில் இருக்கிறது?

கவர்ச்சிகரமானவை எல்லாம் இந்து நாட்டில் கடவுளோடு தொடர்பு உடையதாகத்தானே அமைந் திருக்கின்றன?

யானையைக் கொண்டுவந்து இளம் பெண்ணை மிரட்டிப் பயந்து போய் அவள் தன்னைக் கட்டிக்கொள்ளுமாறு செய்த முருகன்!

உள்ளாடை இல்லாத நிலையில் காலை மேலே தூக்கி நடனமாடிப் போட்டிக்கு நாட்டியமாடிய பெண்ணை அருவெறுப்பு அடையச் செய்து வெற்றி கண்ட அவனப்பன் சிவன்!

எதிரிகளை அழிக்க முறைப்படி போரிட வக்கற்ற வீரர்கள் பிறப்பதைத் தடுக்க பிறப்புறுப்பில் வாய் வைத்து உறிஞ்சிய பிள்ளையார் என்கிற வரிசையில்
கவர்ச்சியின் உச்சக் கட்டமாகக் கிருஷ்ணன். துணிகளை கரையில் வைத்துவிட்டு ஆற்றில் பெண்கள் நீராடியபோது அவர்களின் உடைகளைத் தூக்கிக் கொண்டு போய் மரக் கிளையில் குந்திக் கொண்டு, ``அம்மண தரிசனம் கேட்டுப் பெற்றுப் பரவசமடைந்து அதன்பின் ஆடைகளைத் தந்த காமாந்தகாரக் கிருஷ்ணன்!
இவனுடைய லீலையைப் படமாக்கிக் காண்பித்து இத்தகைய காட்சிகளை 5000 ஆண்டுக் கால இந்துப் பாரம்பரிய பெருமையைக் கண்டுகளிப்பதற்கு உங்களுக்கு ஒரு ஜோடி பூட்ஸ் மட்டும் போதுமானது என்று ஒரு விளம்பரம் இந்திய அரசின் சுற்றுலாத் துறையின் சார்பாக!

சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்ட இந்தப்பட விளம்பரத்தைப் பற்றி இப்பொழுது எழுதி அந்தத்துறையின் அமைச்சருக்கு எதிரானப் பிரச்சாரத்தைத் தொடங்கிவுள்ளன, மதவெறி அமைப்புகள் (இந்த அமைச்சர் பிற்படுத்தப்பட்ட பெண் ஆவார்)

ராமன் விசயத்தில் பதவி பறிக்கப்படும் என எதிர் பார்த்தார்களாம்! அது நடக்கவில்லை என்பதால் ராமனை ஒரு கையில் பிடித்தவர்கள் இப்போது கிருஷ்ணனைத் தூக்கிப் பிடித்திருக்கிறார்கள்!
(திருப்பணி உபயம்: `த சன்டே இந்தியன் -7-10-2007)
வடநாட்டில் இருக்கும் இந்து மத (மட) பக்தர்களின் பக்தியை மலிவாகத் தூண்டி விட்டுப் பலன் அடையத் துடிக்கிறார்கள்.

அரசு நடவடிக்கை எடுத்தால், எல்லா மதத்தையும் ஒரே மாதிரி நடத்து,
என் மதத்தின் அற்பத் தன்மையைப்பற்றி வாய் திறக்காதே என்கிறார்கள்.

பின் எதற்கு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 51 ஏ இருக்கிறது? உச்சநீதி மன்றம் இந்தப் பிரிவைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதைப்போல அறிவுள்ளவர்கள் சும்மா இருக்க முடியாதே!

தனி வாழ்க்கையானாலும் நாட்டு வாழ்க்கையானாலும் மதம், கடவுள், நம்பிக்கைகள் என்பவை எல்லாமே தனி! தனி மனிதர்களுடனேயே அமைந்து அடைந்து கிடக்க வேண்டுமே தவிர அம்பலத்திற்கு வந்து அலம்பல் செய்யக் கூடாது.

ஆதாயம் பெற்றவர்கள், ஆதாயம் பெறத் துடிப்பவர்கள் ஆயிரம் கூறலாம். ஆனால், ``அறிவார்ந்தவர்கள் எனக் கூறப்படும் நீதிமன்றப் பெரியவர்கள் அப்படி நடந்து கொள்ளக்கூடாது.

அவர்களின் அபிலாஷைகளுக்கு ரப்பர் ஸ்டாம்ப்ஆகக் கூடாது. அரசமைப்புச் சட்டம் 51 ஏ இன்படி நடந்து கொள்ள வேண்டும். அறிவுள்ளவர் களின் எதிர்பார்ப்பு இது!

தத்தம் கடவுள், மத நம்பிக்கைகள் தாங்கள் அளிக்கும் உத்தரவுகளில் ஊடுருவும்படி அனுமதிக்கக் கூடாது என்பது பொது விதியாக இருந்தாலும் ஒருவர், நான் இன்னாரின் பக்தன், ஆகவே நான் விசாரிக்க மாட்டேன் எனக் கூறுகிறார் என்றால் நீதிபரிபாலனம் எப்படி இருக்கும்?

அது போலவே அரசுபரிபாலனமும் அமைந்து வருகிறது. இவர்களும் குடிமக்கள் தானே! 51 ஏ பிரிவு இவர்களுக்குப் பொருந்தாதா?
சுட்டி:>> http://viduthalai.com/20071006/snews04.html
----------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: