Followers

Saturday, December 15, 2007

பிறப்பு உறுப்புகளை வழிபடும் பழக்கம் + மாதாவின் மாத விலக்கு `மாலை’ யாம்!

இப்படியெல்லாம் வணங்குபவன் காட்டுமிராண்டிதானே?

இந்து என்சைக்ளோபீடியா என்ற நூலைப் பேரா. ராஜ்பாலி பாண்டே என்பார் எழுதியிருக்கிறார் அதில் ``வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்குப் பாகத்தில் (பாகிஸ்தான், ஆப் கானிஸ்தான் உள்பட) பெண் குறி வழிபாடு வழக்கத்தில் இருந்தது எனக் குறிப்பிடுகிறார்.

பிறப்பு உறுப்புகளை வழிபடும் பழக்கம் உலகம் முழுவதுமே இருந்தது. அவற்றிலும் ஆண் குறி வழி பாடுதான் குறிப்பிடத்தக்க அளவில் பரவியிருந்தது.

பெண் குறி வழி பாடு, சக்தி வழிபாடு என்ற பெயரில் இந்தியாவுக்கே உரியது.

சக்தியின் உடலைத் தன் சுதர்சனச் சக்கரத்தால் துண்டு துண்டாக வெட்டிப் போட்டது விஷ்ணு. அது 51 துண்டுகளாகச் சிதறி நாடு முழுவதும் விழுந்து விட்டன.

`யோனி’ எனச் சமக் கிருதத்தில் குறிக்கப்படும் பெண் குறி நிலாச்சலம் எனும் மலைப் பகுதியில் விழுந்து விட்டது. அந்தப் பகுதிதான் அசாமில் உள்ள காமாக்யா கோயில் உள்ள இடம். இங்கே பெண்குறிதான் வழிபடு சிலை.

அசாமின் புகழ் பெற்ற எழுத்தாளர் இந்திரா கோசாமி எனும் அம்மையார் இக்கோயிலைப் பற்றி எழுதியுள்ளார். இக்கோயிலின் முக்கிய விழா - அம்புவாச்சி எனப்படுகிறது.

ஆண்டுக்கு ஒரு முறை இந்தப் பெண் குறியில் `மாத விலக்கு’ ஏற்படுகிறதாம். ஆண்டுக்கொரு முறை நான்கு நாட்கள் உதிரப் போக்கு ஏற்படுவதால் இதை மாத விலக்கு என்று சொல்லக் கூடாது. வருஷ விலக்கு எனலாம். இது ஜுன் மாதத்தில் நடக்கும்.

அப்போது இக்கோயில் நான்கு நாள்களுக்கு மூடப்படு கிறது. கோயில் கிணற்றின் மேல் சிகப்புத் துணி போர்த்தப்படுகிறது. நான்கு நாள்கள் முடிந்ததும் நாடெங்கும் வந்திருந்த பக்தர்களுக்கு சிவப்புத்துணியில் ஒரு பகுதி அல்லது ஒரு நூலிழை பிரசாதமாக வழங்கப்படுகிறது. மாதாவின் மாத விலக்கு ரத்தம் படிந்தது எனக் கருதப்படும் இது அவர்களுக்கு `மாலை’ யாம்!

19-ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோயிலில் மனிதர்களைப் பலி தருவது வழக்கம். பிரிட்டிஷ் அரசு தடை செய்து விட்டது.
http://viduthalai.com/20070630/snews08.htm
----------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: