Followers

Friday, December 14, 2007

கர்ப்பமான கிளி... ஒரு குட்டியைப் போட்டது !!!. கிளி குட்டி போட்டதா?... புராணம் அப்படித்தான் சொல்கிறது.

கர்ப்பமான கிளி... ஒரு குட்டியைப் போட்டது !!!. கிளி குட்டி போட்டதா?... புராணம் அப்படித்தான் சொல்கிறது.

இவ்வளவு வயதானவர் இப்படி கதை சொல்கிறாரே என வருத்தப்பட வேண்டாம். புராணங்களை புரட்டிப் போட்டு ஆராய்ந்து பார்த்தால் இப்படிப்பட்ட காட்சிகள் சர்வ சாதாரணமாக இருக்கின்றன. சரி...

Come to the subject வ்யாஸருக்கு ஒருவர் பிறந்தார். அவர் எப்படிப் பிறந்தார்.
நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.

ரிஷிகள் காம்ய (காம‌ )சுகத்தை அவஸ்யத்துக்காக அனுபவிக்கிறார்கள் என்று. அப்படி காம்ய (காம‌ )சுகத்தை அனுபவிக்காத சந்தர்ப்பங்களில் அவர்களது ரேதஸ்... அதாவது ‘உயிர்த் திரவியம்’ (இந்திரியம்) வெளியாவது இயற்கைத்தானே.

அப்படியோர் பொழுது வ்யாஸரிடமிருந்து வெளிப்பட்டு விட்டது. ரேதஸ். (இந்திரியம்) சிந்தி கிடந்த அந்த ‘ரேதஸ்’ஸை (இந்திரியத்தை) ஒரு கிளி என்ன பண்ணியது. கொத்தித் தின்றுவிட்டது.

கிளியாக வந்த அழகியுடன் கூடினார் என்றும் சொல்வார்கள்.

அதை கொத்தித் தின்ற கிளி சும்மாயிருக்குமா?... அந்தக் கிளி கர்ப்பமாகி விட்டதாம். கிளி கர்ப்பமானால் என்ன செய்யும்? முட்டை போடும். குஞ்சு பொரிக்கும். அது இன்னொரு அழகான கிளியாகும். ஆனால்... இந்த கிளி அப்படி அல்ல. வ்யாஸரின் வீர்யம் (இந்திரியத்தை) சாப்பிட்ட கிளியல்லவா.

அதனால் கர்ப்பமான கிளி... ஒரு குட்டியைப் போட்டது. கிளி குட்டி போட்டதா?... புராணம் அப்படித்தான் சொல்கிறது.
-----------இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 88 ல்
---------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

2 comments:

மாசிலா said...

இன்னா சார் நீங்க?

மாங்கா மரத்துல தொங்கறது மாங்கா பழம்.

அதே போல, தேங்கா மரத்துல தொங்கறது தேங்கா பழமில்லையோ?

அதேபோலதான், குரங்குக்கு பொறக்கறதும் குட்டிதான்.

கிளிக்கு பொறந்தாளும் குட்டிதான்.

வரவர நீங்க ரொம்பவே சிந்திக்க ஆரம்பிச்சிட்டீங்க. பத்தரமா பாத்துக்குங்க!

;-D

சந்திரமுகன் said...

அதை கொத்தித் தின்ற கிளி சும்மாயிருக்குமா?... அந்தக் கிளி கர்ப்பமாகி விட்டதாம். கிளி கர்ப்பமானால் என்ன செய்யும்? அது சரி. கர்ப்பபை வாயிலேவா இருக்கு.அதை பற்றி விளக்கி இருக்கலாமே.