Followers

Wednesday, December 12, 2007

மானமுள்ளவன் தாயை இழிவுபடுத்தும் திதி கொடுக்கலாமா? பார்ப்பானின் வயிறு என்ன பரலோகத் தபால் பெட்டியா?

மானமுள்ளவன் தாயை இழிவுபடுத்தும் திதி கொடுக்கலாமா? பார்ப்பானின் வயிறு என்ன பரலோகத் தபால் பெட்டியா? ---தஞ்சை நாராயணசாமி

மனிதர்கள் சத்துப்போய் இறந்ததும் அவர்கள் உடலிலிருந்து ஆத்மா என்ற ஒன்று வெளியேறி, மனிதர்கள் தம் வாழ்க்கையில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப சொர்க்கம் அல்லது நரகத்திற்குச் செல்வார்கள் என்றும்,

அவர்களின் நன்மைக்கு அவரது வாரிசுகள் திதி என்ற ஒன்று செய்ய வேண்டும் என்றும் பார்ப்பனர்கள் நம் மக்களை நம்பிக்கையுறச் செய்திருக்கிறார்கள்.

எந்த உயிரும் உடலை விட்டுச் சென்றதும் வேறு உடலில் புகுந்து விடும். அது மறுபிறப்பு என்றும் பலமுறை பிறப்பார்கள் என்றும் கூறியுள்ளனர்.

இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடானவை. உடனே மறுபிறப்பு இருந்தால் சொர்க்கம் நரகம் இருக்க முடியாது. அவை இருந்தால் மறுபிறப்பு இருக்க முடியாது.

இரண்டு பொய்யாக இருந்தும் பார்ப்பனரை வீட்டுக்கு அழைத்து திதி கொடுத்து, அவர்களுக்கு புதுத்துணிகள், பொன் பொருள், குடை, செருப்பு, உட்காரும் பலகை காய்கறிகள், நெய் முதலிய வற்றை அவர்களுக்குக் கொடுத்து வணங்க வேண்டும் என்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

சில இடங்களில் பார்ப்பனர்கள் கூட்டாக இருந்து கொண்டு காய்கறிகளை அவர்களே வாங்கி வைத்துக் கொண்டு, திதி கொடுக்க வரும் மக்களின் வசதிக்கு ஏற்ப பணம் பெற்றுக் கொண்டு நடத்துகிறார்கள்.
(உ-ம்: திருவையாறு, திருச்சி அம்மா மண்டபம்),
------------------------------------------------
இதப்படிங்க முதல்ல! திருவரங்கத்தில் பார்ப்பனர்கள் உண்ணாவிரதம்!


திருச்சி, நவ.23- திருச்சி திருவரங்கம் அருகே இருப்பது அம்மா மண்டபம். இங்குதான் இறந்தவர்களுக்குத் திதி கொடுக்கும் மெகா மோசடி நடக்கும். இறந்து போன உறவினர் களுக்கு பிடித்தமானதை கூரியரில் அனுப்புவதாகக் கூறி, தன் வீட்டிற்கு அள்ளிச் செல்லும் கேவலம் இங்குதான் நடந்து வருகிறது.

திதி கொடுப்பதற்கு இப் போதெல்லாம் நேரிடையாக வரவேண்டியதில்லை. கைப் பேசியில் தகவல் கூறி, திதி கொடுத்துவிடுங்கள் என்றால் பார்ப்பனர்களே ஏற்பாடு செய்துவிடுவார்கள். (இதில் பாதிப் பொருள்களை வாங்காமலே ஏப்பம் விட்டு விடுவார்கள்)

இப்படி செய்த திதிக்கு வங்கிக் காசோலை மூலம் பணம் பெறப்படுகிறது. (விஞ்ஞான வளர்ச்சியைப் பயன்படுத்த வேண்டுமல்லவா?)

இந்தப்படியான பார்ப்பனக் கொள்ளைகள் பல ஆண்டுகளாக அம்மா மண்டபத்தில் நடந்து வருகின்றன.

(இந்தக் கொள்ளை குறித்து தினமலர் நாலாம் பக்கத்தில் செய்தி ஏதும் வரவில்லையே என யாரும் கேட்காதீர்கள்!)

இந்தப் பல்லாண்டு கொள் ளைக்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அது என்ன வென்றால், திருவரங்கம் அம்மா மண்டபத்தைச் சுற்றிப் புதுப் பொலிவுடன் ரூ. 25 இலட்சம் செலவில் திருச்சி மாநகராட் சியி னர் பூங்கா அமைக்கப் போகிறார்கள்.

பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும், குழந்தைகள் பொழுது போக்கும் வகையிலும் இந்தப் பூங்காவை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ள. சுற்றிலும் அற்புதமான காவிரிக் கரையில் அமர்ந்து இரசிக்க இந்தப் பூங்கா பயன்படும்.

ஆனால் திருவரங்கம், அம்மா மண்டபம், திருவானைக் கோவில் போன்றவை எல்லாம் எங்களின் பிரத்யேகமான கொள்ளைப் பகுதிகள் எனப் பார்ப்பனர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள்.

எனவே அம்மா மண்டபத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம், பூங்காவை அனுமதிக்க மாட்டோம் எனப் பிடிவாதம் செய்கின்றனர்.

இந்த இடத்தில்தான் கவனிக்க வேண்டும். இதுநாள் வரை திதி கொடுத்த எந்தத் தமிழனும், எங்களுக்கு திதி கொடுக்க இடமில்லையே என வருந்தவில்லை, பூங்கா அமைக்கவும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் பார்ப்பனர்கள் குதிக்கிறார்கள்.

இதற்காகப் போராட்டம் நடத்தப் போவதாக புரோகிதப் பார்ப்பனர் சங்கத் தலைவர் துளசிராமன் என்பவர் அறிவித் தார். (சங்கங்களில் கூட புரோகிதப் பார்ப்பனச் சங்கம், கணினிப் பார்ப்பனச் சங்கம், பத்திரிகை யாளர் பார்ப்பனச் சங்கம் என வகை வகையாய் வைத்திருப்பார்கள் போல).

அதன்படி சில தினங்களுக்கு முன்பு 50க்கும் மேற்பட்ட புரோகிதப் பார்ப்பனர்கள் அம்மா மண்டபத்தில் ஒன்று கூடினர். காலை 8 மணி தொடங்கி, மாலை 6 மணி வரை உண்ணா விரதம்(?) இருந்துள்ளனர்.


(அமைக்காதே! அமைக்காதே! பூங்கா அமைக்காதே! வேண்டாம்! வேண்டாம்! தமிழர்கள் வாழ்வில் மகிழ்ச்சியே வேண்டாம்! என முழக்கங்கள் எழுப்பினார்களா என்பது தெரியவில்லை!)

ஆக, பூங்கா அமைப்பது சுற்றுப்புறச் சூழலுக்கும், மன அமைதிக்கும், பொதுவாக ஒரு சமூகத்தில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் பார்ப்பனர்கள் செய்யும் வேலைகளைப் பார்த்தீர்களா?

உண்ணாவிரதமாம், உண்ணா விரதம். சாப்பிடுகிற நெய்க்கும், வெண்ணெய்க்கும் ஒரு மாதம் உண்ணாவிரதம் இருந்தாலும் அவர்களின் உடம்புக்கு ஒன்றும் ஆகாதுதானே! >> http://viduthalai.com/20071123/news8.html
-----------------------------------------


தந்தை பெரியார் அவர்கள் தான் இதை மக்களுக்கு விளக்கிச் சொல்லி, பார்ப்பானின் வயிறு என்ன பரலோகத் தபால் பெட்டியா?

முதல் ஆண்டு திதியின்போது பார்ப்பானிடம் கொடுத்த பொருள்கள் வந்து சேர்ந்ததற்கு முன்னோர்களிடமிருந்து ஒப்புதல் கிடைத்ததா? என்றும் கேட்டார்.

நமது பொருள்களை, பார்ப்பனர்கள் கவர்வதற்கும், நம்மை அடிமைப்படுத்தி அவன் சொல்படி நடக்கச் செய்து இழிவு செய்யவும் ஏற்படுத்தப்பட்ட மோசடியாகும்.

திதி காலத்தில் அவன் சொல்லும் மந்திரம் நமது தாய்மார்களின் நடத்தையைக் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தவே உள்ளன.
அவை.1) `ஏகமாதா வெகு பிதா சத்சூத்ராய’’பொருள்: ஒரு அம்மாவுக்கும், பல அப்பாக்களுக்கும் பிறந்த சூத்திரனே (சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் என்று பொருள்)

2) ``யன்மே மாதா பிப்ர மமதயச்சாரானனுவ் ரதம்தன்மே ரேத பிதாவ்ருங்க்தமாபூரன் யோப பதயதாம்பித்ருப்யஸ்வதா விப்ய: ஸ்வதா’’
பொருள்: எனது தாய் பதிவிரதா தர்மங்களை முழுதுமாக அனுசரிக்காமல், அதன் காரணமாக நான் பிறந்திருந்தால், இந்த நெருப்பில் நான் இடும் பிண்டத்திற்கு உரிமை கோரி எனது சொந்தத் தகப்பனார் வருவார்.

அப்படி அவர் வராமல் தடுத்து, நான் எந்தத் தகப்பனாருக்கு இந்தச் சிரார்த்தத்தைச் செய்கிறேனோ அவர், அதாவது எனது தாயின் கணவர் இந்தப் பிண்டத்தைப் பெற வேண்டும்.

3) `யதித்விபிதாஸ்யா தேகை கஸ்மின்பிண்டேத் வெனத் வாவு பல ஹ்யேக்’’
பொருள்: ஒருவனுக்கு இரண்டு தகப்பன்களிருந்தால் ஒரு பிண்டத்திலேயே அவ்விருவர்களையும் குறிக்க வேண் டும். பிண்டம் போடும்போது சொல்ல வேண்டிய
`யேசத் வாமனு’’ என்கிற மந்திரத்தை `ஏதத்வாம் தாதன ரேசத் வாமனு’’ என்றிவ்வாறு சொல்ல வேண்டும்
(சிரார்த்த காலத்தில் உபஸ்தானமந் திரம்) எழுந்து நின்று `யன்மேமதா.. ஸ்வதா’’ என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டியது. (ஆபஸ்தம்பர்)4) ``அனேன விதினா ஜாத:க்ஷத்ரினிபை ஸபவேத்ஸுத்’’

பொருள்: இங்கு `க்ஷத்ரி’ என்ற சொல்லிற்கு `நிலத்தின் சொந்தக்காரன்’ என்று பொருள் மக்களைப் பெறுதல் பயிர் தொழில் போன்றதால், தாயின் சரீரம் நிலமும், தந்தையின் வீரியம் வித்தும் என்பர் வடநூலார்.- யக்ஞவல்கியர்

-5) ``என்மே மாதா ப்ரலு லோபசரதிஅனனவ் வ்ரதா தன்மே ரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹாஅவபத்யதாம்’’
பொருள்: நான் யாருக்குப் பிறந்தேன், என் அப்பா யாரெனத் தெரியாது.

மற்றவர்கள் சொல்வதால் நம்ப வேண்டியுள்ளது. ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியைக் கொண்டு போய்ச் சேர்ப்பீர்.

மேற்கண்ட மந்திரங்களை, நம்மைச் சொல்லச் செய்து, நாமே நம் அம்மாவை இழிவுபடுத்தும் நிலையைப் பார்ப்பனர்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதனை உணர்ந்து நம் இன மக்கள் திதி கொடுப்பது என்ற மூடப் பழக்கத்தை விட்டுவிட வேண்டும். ARTICLE BY : >>---தஞ்சை நாராயணசாமி
IN >>: " VIDUTHALAI.COM"
-------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: