Followers

Tuesday, December 11, 2007

அமெரிக்காவை ஆக்கிரமிக்கும் இந்தியாவில் விரட்டப்படும் பார்ப்பனீயம்!

இந்தியாவில் விரட்டப்படும் பார்ப்பனீயம் வெளி நாடுகளில் பாதுகாப்பைத் தேடுகிறது.

அதில் அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இல்லையானால், அந்த நாடுகளுக்கும் ஆபத்து என்று எச்சரிக்கின்றோம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்காக தீபாவளி வாழ்த்துகள் தெரிவிக்கப்படும் என்று ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
இதற்கு முன்பும்கூட அங்கு செனட் சபை தொடங்கும் போது வேதங்களிலிருந்து சில சுலோகங்கள் முழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

பார்ப்பனர்கள் எங்கு இருந்தாலும், குடியேறினாலும், தங்களின் பார்ப்பனீயத்தைக் குடியேற்றுவதில், அதற்கொரு அங்கீகாரத்தை நிறுவுவதிலும் எப்பொழுதுமே மிகவும் கவனமாக இருப்பார்கள்.

இந்தியாவுக்குள்ளேயே சிந்துச்சமவெளி நாகரிகம், ஆரியர் நாகரிகம் என்றும், அங்கு புழக்கத்தில் இருந்தது எருதுகள் அல்ல - குதிரைகள் என்றும் கணினிமூலம், கிராபிக்ஸ் வித்தைகள்மூலம் பித்தலாட்டம் செய்த கூட்டமாயிற்றே - வெளிநாட்டில் செய்யக் கேட்கவா வேண்டும்?

விவேகானந்தர் பற்றி தந்தை பெரியாரிடம் ஓர் அமெரிக்கர் கேட்டார்; அவர் ஒரு கிறுக்கர் என்றார் தந்தை பெரியார். அப்படி எப்படி சொல்வீர்கள்? எங்கள் அமெரிக்காவிலேயே விவேகானந்தரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோமே! என்று அந்த அமெரிக்கர் தந்தை பெரியாரிடம் கூறியபொழுது தந்தை பெரியார் சொன்ன பதில் என்ன தெரியுமா?
முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கு மட்டுமே சொந்தமா? என்றுதான் அந்தப் பதில். இந்த நேரத்தில், அதனை நினைவுபடுத்திக் கொள்வது மிகவும் பொருத்த மானதாகும்.

அமெரிக்கர்களுக்கு ஒன்று தெரியாமல் இருக்கலாம். இந்தியர்கள் என்றால் அவர்கள் பார்ப்பனர்கள் மட்டும் தான் என்று நினைக்கிறார்கள்போலும்! இந்தியாவில் பார்ப்பனர்களுக்கு எத்தகைய எதிர்ப்புகள் இருக்கின்றன என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.

இந்து மதம் என்பது பார்ப்பனர்களைப் பிறப்பின் அடிப்படையில் உயர்வாக மதிப்பிடக் கூடியதாகும். பிரம்மா என்பவர் இந்த உலகத்தையே பிராமணர்களுக்காக படைத்தார் என்பது இந்து மத சாத்திரங்கள்.
பார்ப்பனர்களின் இந்து மதம் உருவாக்கி வைத்திருக்கிற அவதாரங்கள் எல்லாம் பார்ப்பனர்களைப் பாதுகாக்கவும், அவர்களின் எதிரிகளை அழிக்கவும்தான் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.


அவர்களால் உருவாக்கி வைக்கப்பட்டுள்ள பண்டிகைகளும், ஆரிய - திராவிடப் போராட்டத்தை மையமாகக் கொண்டவையேயாகும்.

இந்தியாவில் பார்ப்பனர்கள் அல்லாதார்தான் பெரும்பாலான மக்கள். இந்த நிலையில், பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் அழிவு படுத்தும் நோக்கமுடைய பண்டிகைகளை அமெரிக்க நாடாளுமன்றம் அங்கீகரிப்பது - கோடானு கோடி பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மை மக்களைக் கொச்சைப்படுத்துவதாகும்.

அமெரிக்காவில் உள்ள பார்ப்பனர் அல்லாத மக்களும், பகுத்தறிவாளர்களும், மனிதநேயச் சிந்தனையாளர்களும் இந்த உண்மை களை உரிய முறையில் அமெரிக்க அரசுக்கும், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

பார்ப்பனீயம் என்பது ஒரு வகை நச்சுக்கிருமியாகும்; அது ஊடுருவும் இடங்களையெல்லாம் அழித்து முடித்து விடும்.

இந்தியாவில் விரட்டப்படும் பார்ப்பனீயம் வெளி நாடுகளில் பாதுகாப்பைத் தேடுகிறது. அதில் அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இல்லையானால், அந்த நாடுகளுக்கும் ஆபத்து என்று எச்சரிக்கின்றோம்!
http://viduthalai.com/20071103/news4.html
------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: