Followers

Tuesday, December 4, 2007

மத வெறியர்களின் முகத்திரை கிழிந்தது !

மத வெறியர்களின் முகத்திரை கிழிந்தது !
தண்ணீரில் 7 கிலோ எடையுள்ள கல் மிதந்தது !


புனிதக்கல் புரட்டை உடைத்தெறிந்தனர் திருவரங்கம் கழகத் தோழர்கள்

திருச்சி,டிச3. கடந்த 24.11.2007 அன்று காலை 10 மணிக்கு திருவரங்கம் ராஜகோபுரம் முன்பாக விசுவ இந்து பரிசத் என்ற அமைப்பினர் ஒரு கண்ணாடி மீன் தொட்டியில் தண்ணீரை நிரப்பி அதில் ஏதோ ஒரு பொருளை மிதக்க விட்டு அந்த தொட்டியையும், அதில் உள்ள பொருளையும் எவரும் நெருங்கி விடாதபடி ஒரு சிறிய சரக்கு வண்டியில் (மினிடோர் ஆட்டோ) ஏற்றி அதை சுற்றி நின்று கொண்டு ஒலி பெருக்கியில் இது ராமன் பாலத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட புனிதக் கல் எனவேதான் தண்ணீரில் மிதக்கிறது. ஆகவே ராமன் பாலத்தை இடிக்க கூடாது சேதுக் கால்வாய் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்தனர்.

அந்த நேரத்தில் அங்கு வந்த கழகப் பேச்சாளர் சீனி. விடுதலை அரசு, தோழர் கள் கி. இளங்கோவன், சா. சீனிவாசன், சுரேசு, காங்கிரசு கட்சியை சேர்ந்த பாத யாத்திரை நடராசன், செல்வி குமரன், திமுகவை சேர்ந்த வக்கீல் வேலு ஆகியோர் காவல்துறையினரி டம் ``இந்த இடம் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட இடம் மற்ற எந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் இந்த இடத்தில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்படும் நிலையில் இவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்தது முறையா?

என்று கேட்டு கொண்டிருக்கும்போது காவிக் கூட்டத்தில் இருந்த ஒருவர் குறுக்கே புகுந்து நாங்கள் இந்த இடத்தில்தான் பிரச்சாரம் செய்வோம். உங்களால் என்ன செய்ய முடியும்? என்று சவால்விட
உடனே கழகத் தோழர்கள் ``தேவை, தேவை சேதுக் கால்வாய் திட்டம் தேவை!

மதவெறியர்களே மிதக்கும் கல்லை ஆய்வு செய்யத் தயாரா?
என்று உணர்ச்சியுடன் முழக்கமிட்டனர். அனைத்து கட்சியினரும், மற்றும் பொது மக்களும் கழகத் தோழர்களின் நியாயமான முயற்சிக்கு ஆதரவாக திரண்டனர்.

மிதக்கும் கல்லை ஆய்வு செய்ய வேண்டும் என்றவுடனேயே மதவெறியர்கள் பின்வாங்கி திருவரங்கத்திற்குள் நுழையாமல் வந்த வழியே திரும்பி சென்றனர்.

திருவரங்கத்தில் மட்டுமல்லாது நாடு முழுவதும் இதைப் போலவே மிதக்கும் புனிதக் கல் என்று பிரச்சாரம் செய்து மக்களை ஏய்க்கும் காவிக் கூட்டத்தின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் வகையில் 27.11.2007 செவ்வாய் மாலை 5 மணிக்கு திருவரங்கம் பேருந்து நிலையம் அருகில் திராவிடர் கழக பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட தி.க., தலைவர் மு. சேகர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ம. செந்தமிழினியன், திருவானைக் காவல் தி.க., தலைவர் த. நாகராசன், திருவரங்கம் தி.க., தலைவர் த. குமார், செங்கிபட்டி பொன்னுச்சாமி, ப. இராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கட்டடம் கட்ட பயன்படுத்தப்படும் ஏழு கிலோ எடையுள்ள கல் நீர் நிரப்பிய கண்ணாடி தொட்டியில் மிதக்க விடப்பட்டது.

திருவரங்கம் பெரியார் சிலை அமைப்பு குழு தலைவர் டாக்டர் எஸ்.எஸ். முத்து அவர்கள் இராமயண ஆபாசங்களை விளக்கி பேசினார். இறுதியாக கழகப் பேச்சாளர் சீனி. விடுதலை அரசு மிதக்கும் புனிதக் கல் புரட்டை அம்பலப்படுத்தி கிரேக்க அறிஞர் ஆர்க்கிமீடிஸ் கண்டுபிடித்த மிதத்தல் அளவை கோட்பாட்டை எடுத்து காட்டியும், பார்ப்பனீயத்தின் பாதுகாவலனாக இருந்தவனே இராமன் என்பதை விளக்கியும், சேதுக் கால்வாய்த் திட்டத்தின் தேவையை வலியுறுத்தியும் சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றினார். நகர செயலாளர் மோகன்தாசு நன்றி கூறினார்.

பொது மக்கள் குறிப்பாக திருவரங்கம் கோவிலுக்கு வருகை தந்த பல ஊர்களை சேர்ந்த பக்தர்கள் மிதக்க விடப்பட்ட கல்லை கைகளில் எடுத்து தூக்கி பார்த்து, தோழர்களிடம் விளக்கம் பெற்று மதவெறிக் கூட்டத்தின் பொய்க் கதைகளை உணர்ந்து தெளிவு பெற்றனர். அனைவரும் பெரியார் தொண்டர்களின் பகுத்தறிவு பணியை பாராட்டினர்.

நிகழ்ச்சியில் ஆசிரியர் அமிர்தம், கோ.பாலசுப்பிரமணியன், எஸ்.ஏ.பி. நடராசன், சீனி. சீராளன், த. அண்ணாதுரை, திருவானைக்காவல் பழனி, சந்திரன், ஜெயராஜ், விடுதலை செல்வம், கி. இளங்கோவன், கலைஞர் பகுத்தறிவாளர் பாசறை ந. அன்பழகன், காங்கிரசு கட்சியை சார்ந்த பாத யாத்திரை நடராசன், ஜெயம் ஜெயராஜ், கோபி, பெரியார் தத்துவமய்யம் வை. சரவணன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர்.
http://viduthalai.com/20071203/news12.html
-----------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: