Followers

Sunday, December 2, 2007

பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான்

பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான்

இங்குள்ள எல்லா பெண்களையுமே சூத்திரர்களாக பாவித்தது மநு.


இன்றுகூட... என்னை சந்தித்து வேத விளக்கங்கள் பெற வரும் பிராமணப் பெண்களிடம் `நீ சூத்ரச்சி... உன் அம்மா சூத்ரச்சி... உன் பெண்ணும் சூத்ரச்சி...’ என்று கூறுவேன்.

உடனே அவர்கள் மெல்லியதாக கோபப்பட்டு `எப்படி?’ என்பார்கள். நமது ஸ்மிருதியிலேயே இதுதான் விதி என சொன்னதும் `அப்படியா?’ என்ற ஒரு வார்த்தையோடு அடங்கிப் போய் விடுகிறார்கள்.

ஆக... மநு-ப்படி பெண்கள் எல்லாருமே சூத்ர ஜாதிதான். பிராமணப் பெண்கள், வைஸியப் பெண்கள், க்ஷத்ரியப் பெண்கள், சூத்திரப் பெண்கள் என்றெல்லாம் பேதம் கிடையாது.

அதனால்... சூத்ரன் வெளியே உழைப்பதைப்போல சூத்ரச்சியான பெண்கள் வீட்டுக்குள்ளேயே உழைக்கவேண்டும். அதாவது...

``ஸ்த்ரீனாந்த சூத்ர ஜாதினாம்...’’பெண்கள் அனைவரும் சூத்ர ஜாதி.`நஸ்த்ரீ சூத்ர வேத மத்யதாம்...’அதனால்... பெண்களும், சூத்ரர்களும், வேதங்களை ஓதக்கூடாது. வேத ஓசையை கேட்கக்கூடாது. யாகங்கள் நடந்தால்... அதில் ஓதப்படும் வேத மந்த்ரங்களை கேட்காமல் இருப்பதற்காக புடைவையால் காதை மூடிக் கொள்ளவேண்டும்.
பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பே கிடையாது. அவர்கள் வெளியில் போகவும் முடியாது.

பெண்களும் சூத்திரர்களும் ஒன்றுதான். பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அதனால் அவளுக்கு வேதத்தை படிக்கும் அருகதை கிடையாது. வேதத்தை அவள் தொடக்கூடாது. அவள் கண்படக்கூடாது. வேதம் ஓதும் ஓசைகூட அவள் காதில் படக்கூடாது.

அதனால் பெண்களுக்காகவும், சூத்ரர்களுக்காகவும் புராணங்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அதை கேளுங்கள். வேதத்தின் பக்கம் வராதீர்கள்.

இத்தொடரில் முதல் சில அத்தியாயங்களில் நான் சொன்னது ஞாபகம் வருகிறதா? வேத காலத்தில் ஆரியர்கள் இந்தியாவுக்குள் வரும்போது உடன் வந்த பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்று குறிப்பிட்டிருந்தேன். இன்னும் சொல்லப்போனால் பெண்களே வரவில்லை என்றும் கருதலாம்.அப்படிப்பட்ட நிலையில்...

விரதம் இருக்கலாம் ஆனால்... சூத்ரச்சிகளாகவே கருதப்படும் அனைத்துப் பெண்களும்,சூத்ரர்களும் விரதம் இருக்கக்கூடாது... என தனது ஆணையை நிறுவுகிறார் மநு.

"தாத்தாச்சாரி"யின் "இந்துமதம் எங்கே போகிறது" பகுதி - 48 லிருந்து சில
----------------------------------------
இந்து மதம் எங்கே போகிறது ?
பகுதிகளை படிக்க அழுத்தவும் : -
தாத்தாச்சாரியார்
---------------------------------------------------
அழுத்தவும் :- மற்ற பதிவுகள்

No comments: