Followers

Thursday, May 31, 2007

இனிமேல் ராமன் உங்களுக்குக் கை கொடுக்கமாட்டான்.

அணில் சிலிர்த்தவுடன் பாலமா? இனிமேல் ராமன் உங்களுக்குக் கை கொடுக்கமாட்டான். பதவி இழந்தவர்கள் ராமன் பெயரைச் சொல்லிஅரசியல் நடத்த - கிளர்ச்சி செய்யப் பார்க்கிறார்கள்-தமிழர் தலைவர் எச்சரிக்கை விடுத்துப் பேச்சு

திருப்பூர் மே, 15- இருட்டு வந்தால் வெளிச்சம் போய்விடும். வெளிச்சம் வந்தால் இருட்டுப் போய்விடும்.நான்கு யுகமும் சேர்ந்தாலே 43 லட்சம் ஆண்டுகள்எனவே இந்த நான்கு யுகமும் சேர்ந்தாலே மொத்தம் 43 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகள்தான் ஆகிறது.ஆகவே இராமாயணமே கற்பனை.

இதிலே இராமன் என்பவன் இங்கிருந்தானா? அங்கிருந்தானா? என்பது தெரியாது. அயோத்தியில் ராமன் பிறந்தான் என்று சொன்னால், எந்த இடத்தில் பிறந்தான் என்று கேட்டால் உடனே என்ன சொல்லுகின்றார்கள். இங்கேதான் பிறந்தார் என்று சொல்லுகின்றார்கள்.எங்கே?

பாபர் மசூதி உள்ள இடத்தில் ராமன் பிறந்த இடத்திலேயே நாங்கள் கோயில் கட்ட வேண்டுமென்று பா.ஜ.க.-வும், மதவாத அமைப்புகளும் சொல்லின.பதவி இழந்தவர்கள் ஒன்று சேர்ந்துராமன் அவதாரமாக இருந்து, மனிதனாக இருந்து பிறந்தானா? மனிதனாக இருந்து பிறந்தால் ராமன் பிறந்த இடத்தில் கோவில் கட்ட முடியுமா? தயவு செய்து நீங்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ராமன் பிறந்த இடம் எந்த இடம் என்றே அவன் முடிவு செய்யவில்லை. இந்த அயோத்தி வேறு, அந்த அயோத்தி வேறு என்று சொல்லுகின்றான்.இப்படி ஒன்றுமில்லாத ஒரு விசயத்தை வைத்து இதற்கு ஒரு பெரிய அரசியல் கட்சி. அந்த அரசியல் கட்சி பக்கவாத்தியம் பதவியை இழந்தவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எப்படியாவது சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை நடத்தவிடக்கூடாது.ராமன் பாலத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் இதை நடத்தி முடித்துவிட்டால் இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனை என்று வந்துவிட்டால், நமக்கு எதிர்காலம் இல்லையே என்று கருதியவர்கள்தான் இல்லாத ராமன் பாலத்தைக் கட்டித் தொங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

இராமேசுவரம் கடல் பகுதியில் இருப்பது மணல் திட்டு, சுண்ணாம்புப் பாறை இருக்கிறது. உடனே படித்தவர்களை ஏமாற்றுவதற்கு என்ன செய்கிறார்கள்?எதற்கும் கூலிப்படை: அமெரிக்காவின் விண்வெளித் தளம் பெரிய ஆராய்ச்சிக் கூடமாக இருக்கிறது. நாசா மய்யத்திலேயே இந்த மாதிரி ஒன்று இருந்தது என்று ஒருவர் எழுதிவிட்டார் என்று சொல்லுகிறான். உலகத்தில் இந்த மாதிரி புளுகுகிறவனை வேறு எங்கேயும் காண முடியாது. திட்டமிட்டு கூலிக்கு ஆள் பிடிக்கிறான்.எப்படி கொலை செய்வதற்கு கூலிப்படையைப் பிடிப்பார்களோ, அதே மாதிரி உண்மையை கொலை செய்வதற்கும் இந்த நாட்டிலே கூலிப்படை இருக்கிறது.

அமெரிக்காவிலும் கூலிப்படை இருக்கிறது.பல சங்கதிகளை பெரியார் படத்தில் வைக்க முடியவில்லை.நம்முடைய நாட்டில்தான் முட்டாள்தனம், மூடத்தனம் இருக்கிறதா? அமெரிக்காவில் நிறைய மூடத்தனம் இருக்கிறதே என்று ஒரு செய்தி வந்தது.நான் `விடுதலை’ அலுவலகத்தில் இருந்த சமயம்...நான் `விடுதலை’ அலுவலகத்தில் ஆசிரியராக இருக்கின்றேன். ஆங்கில இதழில் அந்த செய்தி வந்தது. அதைப் படித்தவுடன் எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.அமெரிக்கா முன்னேறிய நாடு என்று நாம் நினைக்கின்றோம். அந்த நாட்டில் இவ்வளவு முட்டாள்தனமும், மூடநம்பிக்கையும் இருக்கிறதே பத்திரிகையில் வந்திருக்கிறதே என்று எனக்கு ஆச்சரியம். இந்த செய்தியை அய்யா அவர்களிடம் சொன்னால் ஆச்சரியப்படுவார். இதைப் பற்றி அய்யா கருத்து சொல்லுவார். என்ன சொல்லுகிறார் என்று கேட்போம் என்று நினைத்து நேரே அய்யா அவர்கள் இருந்த இடத்திற்குச் சென்றேன்.என்னங்க, என்னங்க என்று கேட்டார். `அய்யா! இப்படி-யொரு மூடநம்பிக்கை செய்தி வந்திருக்கிறது என்று சொன்னேன். எங்கேயிருந்து வந்திருக்கிறது என்று கேட்டார்.

அமெரிக்காவிலிருந்தே இப்படி ஒரு மூடநம்பிக்கை செய்தி வந்திருக்கிறது என்று சொன்னேன்.முட்டாள்தனம் என்ன உனக்கே சொந்தமா?அய்யா அவர்கள் ரொம்ப ஆச்சரியப்பட்டு செல்லுவார் என்று பாத்தேன். அய்யா அவர்கள் ரொம்ப அமைதியாக இருந்தார்.நாம் இவ்வளவு வேகமாக இருந்து சொல்லுகின்றோமே. அய்யா அவர்கள் இவ்வளவு அமைதியாக இருக்கின்றாரே என்று எங்களுக்கு ஆச்சரியம்.அய்யா உடனே சொன்னார். ஏம்பா! முட்டாள்தனம் என்ன உனக்கே சொந்தம் என்று நினைத்தாயா? அமெரிக்க நாட்டிலே முட்டாள்கள் இருக்கமாட்டானா?முட்டாள்தனம் என்பது உலகம் பூராவும் இருக்கிற செய்தி ஆயிற்றே.முட்டாள்தனம் உனக்கே சொந்தமா? அடுத்தவனிடம் இல்லை என்று நினைத்தாயா? என்று அய்யா அவர்கள் ரொம்ப சுலபமாக பதில் சொன்னார்.

அது மாதிரி அமெரிக்காவில் கூலிப் படையைப் பிடித்துவிட்டார்கள்.வரலாற்றுச் சின்னத்தை மாற்றினர்சிந்து வெளி நாகரிகத்தினர் திராவிடர்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் மாடு இருந்தது. புதைபொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடித்த அந்த மாட்டு சின்னத்தை முரளி மனோகர் ஜோஷி கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் வரலாற்றைக் காவி மயமாக்கக் கூடிய கட்டத்திலே ஆரியர்கள் பூர்வீகக் குடிகள், திராவிடர்கள் வந்தேறிகள் என்று வரலாற்றை மாற்றுவதற்காக ஒன்றை செய்தார்கள்.ஆரியர்கள் குதிரைகளோடு வந்தார்கள் என்பதுதான் வரலாறு. அந்த `சீலை’ அழித்து மாடாக ஆக்கிவிட்டார்கள்.

தாசில்தார் ஆபீஸ் `சீல்’ : தாசில்தார் ஆபிசில் இப்பொழுதுதான் கொஞ்சம் சீல் எல்லாம் தெரிகிற மாதிரி இருக்கும். பழைய காலத்து என் நண்பர் ஒருவர் சொல்லுவார். தாசில்தார் ஆபிஸ் `சீலை’ப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஒரு கத்தரிக்காயை குறுக்கே வெட்டி, அதை நேராக வைத்து ரப்பர் ஸ்டாம்ப் எடுத்தீர்களேயானால், அதுதான் தாசில்தார் `ஆபிஸ் சீல்’ என்று சொல்லுவார் இது அந்த காலத்தில். இப்பொழுது சரியான `சீலை’ வைக்கின்றனர்.மாட்டை குதிரையாக ஆக்கி... :மாட்டை குதிரையாக ஆக்கி வரலாற்றை மாற்றுகிறார்கள். அது வரலாற்றுப் பொய் என்பதைக் கண்டு பிடித்தோம்.

அதற்கு இரண்டு ஆள் கிடைத்தான். ஹார்வர்டில் கிடைத்தான். உடனே அப்பொழுது என்ன சொன்னார்கள் என்றால் அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலேயே இப்படி இருக்கிறது. மாட்டை குதிரையாக ஆக்கிய செய்தியை எடுத்துச் சொல்லி, அதற்கு ஆதாரம் இரண்டு பேருடைய பெயரைச் சொன்னார்கள்.இங்கிருந்து ராஜாராம் என்ற ஒரு அய்யர் போனார். அவர் அங்கிருக்கிற வெள்ளைக்காரர் ஒருவருக்கு சம்பளத்தைக் கொடுத்து எழுதச் சொன்னார். அதுமாதிரி, கூலி எழுத்தாளர்களைப் பிடித்துப் பயன்படுத்தினார்கள்.

நாசாவில் சொன்னார்கள், அங்கே சொன்னார்கள் என்பதெல்லாம் புளுகு.முதலாவது எஞ்சினியர்களை அழைத்துக் கேட்போம்.இந்த பாலங்கள் எல்லாம் எப்பொழுது கட்ட ஆரம்பித்தார்கள் என்று வரலாற்று வருடக் கணக்கை கேட்போம். எத்தனை ஆண்டுகளுக்கு முன்னாலே கட்ட ஆரம்பித்தது? என்று கேட்கவேண்டும்.

அணில் சிலிர்த்தவுடன் பாலமா? : இவன் கதை சொல்லுகிறான். அணில் எல்லாம் தண்ணீரில் இறங்கி குளித்துவிட்டு பாலம் கட்டியதாம். அணிகள் எல்லாம் தண்ணீரில் உடலை ஒரு நனை நனைத்தது. அடுத்து மணலில் ஒரு புரண்டு புரண்டது. அந்த மணலோடு சென்ற அணில் கடல்மீது நின்று ஒரு சிலிர்ப்பு சிலிர்த்தது. அதுதான் அணில் கட்டிய பாலம் என்று சொன்னால் மக்களை எவ்வளவு முட்டாளாக்குகின்றது இந்த செய்தி என்று பார்க்க வேண்டாமா?

இதைவிட நல்ல உதாரணம் வேறு உண்டா?அரசியல் நடத்தலாம் என நினைத்தால்... :ஆகவேதான் இந்த ராமன் பாலத்தை வைத்துக் கொண்டு இன்றைக்கு அரசியல் நடத்தலாம் என்று வரக்கூடியவர்களுக்கு நாங்கள் ஒன்றைத் தெளிவாகச் சொல்லுகின்றோம்.இனிமேல் ராமன் உங்களுக்குக் கை கொடுக்கமாட்டான்.நீங்கள் இதை வைத்துக் கொண்டு உங்களுடைய அரசியல் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள் (கை-தட்டல்).ராமர் பாலம் பெயரை வைத்து அரசியல் நடத்தப் பார்க்கிறார்கள்? தமிழ்நாடு இப்-பொழுது அமைதிப் பூங்காவாக இருக்கிறது. இந்த அமைதிப் பூங்காவில் ஏதாவது ஒரு கிளர்ச்சி செய்யவேண்டும்? ஏதாவது ஒரு ரகளை பண்ணலாம் என்ற பார்க்கிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. ("விடுதலை" 15.05.07 )

No comments: