Followers

Thursday, May 31, 2007

வடக்கே உள்ள மணல் திட்டுக்களை யார் கட்டியது?

புவியியல் நிகழ்வுகளுக்கு கற்பனை வளமூட்டிய உலகம் முழுவதுமுள்ள பல எடுத்துக்காட்டுகளுள் இதுவும் ஒன்று. ``தெற்கே உள்ள மணல் திட்டுக்களை ராமன் கட்டியிருந்தால் வடக்கே உள்ள மணல் திட்டுக்களை யார் கட்டியது?’’ என்று எழுப்பியுள்ள வினா அற்புதமானது, ஆழ்ந்து சிந்திக்க வேண்டியது.

``தெற்கே உள்ள மணல் திட்டுக்களை ராமன் கட்டியிருந்தால் வடக்கே உள்ள மணல் திட்டுக்களை யார் கட்டியது?’’முதலமைச்சர் கலைஞரின் சிந்தனை வினா.சென்னை, மே 22- கடலுக்கடியில் தெற்கே உள்ள மணல் திட்டக்களை ராமர் கட்டியிருந்தால் வடக்கே உள்ள மணல் திட்டுக்களை யார் கட்டியது என்று ஒரு ஆராய்ச்சியாளர் கேட்ட வினாவை சுட்டிக்காட்டி தமிழக முதலமைச்சர் கலைஞர் பதில் எழுதியுள்ளார்.

ராமன் பாலம்கேள்வி: சேது சமுத்திரத் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுத்து விட்டதே?கலைஞர்: நல்ல செய்திதான். ஏற்கெனவே சேது சமுத்திரத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற போதே சென்னை உயர்நீதிமன்றத்தில் வேண்டுமென்றே சிலர் வழக்கு தொடுத்தபோது, சென்னை உயர்நீதிமன்றத்தில் அது நல்ல திட்டம் என்றும், வரவேற்கக் கூடியது என்றும் கூறி தடை விதிக்க மறுத்து விட்டார்கள்.

கடலியலாளர் மறவன் புலவு க. சச்சிதானந்தன் அவர்கள் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் `இடசை நீரோட்டக் காலத்தில் (வைகாசி ஆவணி) அரபிக் கடலிலிருந்து வங்காள விரிகுடாவுக்கு பாக் நீரிணை வழியாக வண்டல் மணல் கலந்த நீர் பயணிக்கும். எதிரெதிர் நீரோட்டங்கள் நிகழ்வதால் பாக் நீரிணையின் இரு எல்லைகளிலும் திட்டுக்கள் இருக்கின்றன.இவை வடக்கே கோடியக்கரையிலிருந்து தெற்கே யாழ்ப்பாணம் வரை நீளும் மணல் திட்டும், மேற்கே தனுஷ்கோடியிலிருந்து கிழக்கே தலைமன்னார் வரை நீளும் மணல் திட்டும் ஆகும். அத்தகைய ஒரு திட்டு மனிதனால் அமைக்கப்பட்டவை என்று கூறுவது அதீத கற்பனை. (விடுதலை 19.05.07)

தேசப் பிதாவுக்கே தீட்டைக் கழித்தவர்

காஞ்சி சங்கரமடத்தின் முன்பிருந்த மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசப் பிதாவுக்கே தீட்டைக் கழித்தவர்--அவரது தீட்டுக் கருத்தியல், பெண்களைக் குறித்த விமர்சனம் ஆகியன மிகவும் பிற்போக்கானவை.அதிகார மையமாகச் செயல்பட்டு வரும் காஞ்சி சங்கரமடத்தின் இன்றைய மடாதிபதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது, இவருக்கு முன்பிருந்த மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் பல்வேறு பத்திரிகைகள் அடிக்கடி நினைவு கூர்ந்தன. அவர் மிகவும் நல்லவர், நேர்மையானவர், அப்பழுக்கற்றவர் என்பதுபோன்ற கருத்துகள் முன் வைக்கப்பட்டன.

அவரது தனிப்பட்ட ஒழுக்கத்துடன், ஜெயேந்திரர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் ஒப்பு நோக்கப்பட்டன.ஆனால் ஒரு மனிதனின் தனிப்பட்ட ஒழுக்கம் எந்தளவுக்கு முக்கியமானதோ, அந்தளவுக்கு அவனது சமூக ஒழுக்கமும் முக்கியமானது. இந்த வகையில் பார்த்தால் அவரது தீட்டுக் கருத்தியல், பெண்களைக் குறித்த விமர்சனம் ஆகியன மிகவும் பிற்போக்கானவை.

15.10.1927-இல் பாலக்காடு நல்லசேரி என்ற பகுதியில் இவர் தங்கியிருந்த போது மகாத்மா காந்தி இவரைச் சந்திக்கச் சென்றார். தேசத் தந்தை என்றழைக்கப்பட்டாலும், காந்தி வைசிய வருணத்தைச் சார்ந்தவர் என்பதால், `சாமியின் தரிசனம் மாட்டுத் தொழுவில்தான் அவருக்குக் கிட்டியது.வைசியருடன் உரையாடுவதால் ஏற்படும் தீட்டை மாட்டுத்தொழு போக்கி விடும்’ என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.

தேசப் பிதாவுக்கே தீட்டைக் கழித்தவர், மாதப் பூப்புக்களாகும் பெண்களைக் குறித்து பயப்படாமல் இருப்பாரா?திருப்பதி மலைப் பகுதியில் பேருந்து ஒன்று கீழே விழுந்து பலர் இறந்துபோன நிகழ்வை ஒட்டி அவர் தெரிவித்த கருத்து வருமாறு: `முன்னெல்லாம் வீட்டு விலக்கு என்று எவர்களை வீடுகளிலேயே தனித்து வைத்தார்களோ அவர்கள் இப்போது கோயிலிலும்கூட விலக்கு இல்லாமல் பிரவேசித்துவிடுகிறார்கள்.இந்த விதிகளை மீறுவ தால்தான் மகாnக்ஷத்திரங்களில், விபத்து, விபரதம் எல்லாம் ஏற்படுகின்றன என்பது என் அபிப்பிராயம்

’இதோடு விட்டாரா? இந்தியா முன்னேறாது என்று சாபம் இடுகிறார்.``இப்போது அந்த மூன்று நாட்களும் ஸ்திரீகள் ஆஃபீஸுக்குப் போவதில் ஊர் பூராவும் தீட்டுப் பரவுகிறது. `அட்மாஸ் ஃபெரிக் பொல்யூஷன்’ என்று இன்றைக்கு அநேக விஷயங்களை எடுத்துக்காட்டி எதிர்நடவடிக்கை எடுக்கும்படி எச்சரிக்கிறார்கள்.அந்தப் `பொல்யூஷன்’ எல்லாவற்றையும்விடப் பொல்லாதது ஸ்த்ரீகளின் தீட்டே. அதை இப்படி எல்லா இடத்திலும் கலக்க விட்டால், ஜனங்களுக்கு எத்தனை தான் வரும்படி வந்தாலும், கவர்ன்மென்ட் எத்தனைதான் அய்ந்து வருட திட்டம் போட்டாலும், தேசத்தில் துர்பிக்ஷமும், அசாந்தியும், வியாதியுமாகத் தான் இருக்கும்.

’தீட்டு குறித்த அவரது பயம் ஒருபுறமிருக்க, திருக்குறள்மீதும், தமிழ்மொழி மீதும் அவருக்கு ஒரே பயம்தான். ஆண்டாள் திருப்பாவையில், `செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்’ என்ற தொடர் வருகிறது. இத்தொடரில் இடம் பெறும் `தீக்குறளை’ என்ற சொல் தீமை பயக்கும் புறம்பேசுதலைக் குறிக்குமென்பதே உண்மை. வைணவர்களும் இதே பொருளைத் தான் கூறுகிறார்கள்.

ஆனால் நமது ஆச்சாரியாரோ வேடிக்கையான விளக்கத்தைத் தந்தார். திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளே இருக்கின்றன. வீடு என்பது இல்லை. நாற்பொருளைக் குறிப்பிடாத திருக்குறளை ஓதக் கூடாதென்ற பொருளில்தான் `தீக்குறள்’ என்று ஆண்டாள் குறிப்பிட்டுள்ளதாகப் புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

வரலாற்றுப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் எழுதியுள்ள சுயசரிதையில் இவரைப் பற்றி இடம் பெற்றுள்ள ஒரு செய்தி தமிழின்மீது இவர் கொண்ட வெறுப்பு எத்தகையதென்று வெளிப்படுத்துகின்றது.குளித்துவிட்டு பூசை செய்து முடிக்கும்வரை இவர் தமிழில் பேச மாட்டாராம். சமஸ்கிருதத்தில்தான் பேசுவார். ஏனென்றால் தமிழ் `நீசபாசை’யாம். பூசை முடிந்தபிறகுதான் நீசபாசையில் பேசுவாராம்.மனிதநேயம் என்ற சொல் அறிமுகமானபோது அவர் தந்த விளக்கம் வருமாறு:ஸமீபத்தில் `மனிதநேயம்’ என்ற ஒரு வார்த்தை உலாத்துகிறதாகப் பார்க்கிறேன். நல்ல வார்த்தைதான். காதுக்குக் கேட்கவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும் `மனிதாபிமானம்’ என்று இத்தனை நாளாகச் சொல்லி வந்ததில் `அபிமானம்’ என்ற ஸம்ஸ்கிருத வார்த்தை இருப்பது பிடிக்காமல் தான் இப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கும்போது பரிஹாஸமாகத்தான் இருக்கிறது!ஏbன்றால், `நேயம்’ என்பதும் ஸம்ஸ்கிருத `ஹநேஹ’த்தின் திரிபுதான்! ஸம்ஸ்கிருதம் என்பது இலக்கண சுத்தமான பாஷை. அதையே பேச்சுக் கொச்சையாக இருக்கும்போது ப்ராக்ருதம் என்பார்கள்.

அந்த ப்ராக்ருத பாஷையில்தான் ஸம்ஸ்கிருதத்தில் உள்ள நாடகங்களில் ஸ்த்ரீகள், படிப்பில்லாதவர்கள் ஆகியவர்கள் ஸம்பாஷிப்பார்கள். அதிலே `ஸ்நேகம்’ என்றுதான் வரும்.அது போகட்டும். `மனிதநேயம்’ என்கிறதிலும் முதலில் மனித என்று வைத்துக் கொண்டிருக் கிறார்களே. அதுவும் ஸம்ஸ்கிருத `மநுஷ்ய’வின் திரிபுதானே? ஒருத்தருக்கும் ஒரு ப்ரயோஜனமுமில்லாமல் இப்படியெல்லாம் வெறும் த்வேஷத்தில் செய்கிற காரியங்கள் கடைசியில் பித்துக்குளித்தனமாகத்தான் முடிகின்றன.அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்ட பொழுது, அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல ஏற்பாடு செய்தார். தமிழ் வழிபாட்டு மொழியாவதை எதிர்த்து வந்தவர்.

இப்படிப்பட்ட ஒருவரின் பெயரால் புதுச்சேரியிலுள்ள மத்திய பல்கலைக் கழகத்தில் `காஞ்சி மாமுனிவர்’ பட்ட மேற்படிப்புத் துறை என்ற துறை ஒன்று புதுச்சேரி அரசியல்வாதி ஒருவரால் உருவாக்கப்பட்டது.புதுச்சேரிக்கு நல்லதொரு முற்போக்குப் பண்பாட்டுப் பாரம்பரியம் உண்டு. `குயில்’, `சுதந்திரம்’, `புதுவைமுரசு’ என்ற முற்போக்கான இதழ்கள் இம்மண்ணிலிருந்து வெளியாகியுள்ளன. பாரதி நடத்திய `இந்தியா’ பத்திரிகை சிறிது காலம் இங்கிருந்துதான் வந்தது. பாரதிதாசன், தமிழ்ஒளி, வாணிதாசன் போன்ற அற்புதமான கவிஞர்கள் தோன்றிய மண். பிரபஞ்சன், புதுவை சிவம் போன்ற இலக்கியவாதிகள் வாழும் மண்.இத்தகைய சிறப்புமிக்க பகுதியில் `நீசபாஷை’ என்று தமிழைக் கருதிய, தீண்டாமையை ஆதரித்த ஒருவரின் பெயரால் பட்ட மேற்படிப்பு மையம் அமைந்திருப்பதும், அம்மையத்தின் ஓர் அங்கமாகப் புதுவைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை இருப்பதும், பொருத்தமற்றது. இதை மாற்றியமைக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை முற்போக்காளர் அனைவரும் ஒன்றிணைந்து எடுக்க வேண்டும்.-ஆ. சிவசுப்பிரமணியன் நன்றி: `ஜனசக்தி’ 17.5.2007 (விடுதலை 19.05.07)

உடம்பெல்லாம் பெண் குறியாக இந்திரன் என்ன செய்தான்? அவன் எப்படிப்பட்ட அயோக்கியன் என்பதைப் புராணம் கூறுவதைப் படியுங்கள்.

தேவர்களின் தலைவன் தேவேந்திரன். இந்தப் பதவி பரம்பரைப் பதவியல்ல. தேர்தலில் நின்று வென்று அடைய வேண்டிய பதவி. ஆனால் தேவேந்திரனின் மனைவியான இந்திராணியோ நிரந்தரமானவள். யார் தேவேந்திர பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு மனைவி இந்திராணிதான். இது என்ன அசிங்கம் பிடித்த ஒழுக்கக் கேடு என்கிறீர்களா? இதுதான் அவாளின் ஒழுக்கம். அதைத்தான் புராணங்கள் பிரதிபலிக்கின்றன.தேவேந்திரன் பதவி நிலையானதல்ல. அடிக்கடி அதற்குப் போட்டி வருவதுண்டு.அப்பாவியான அகலியை எனும் பெண்ணைக் கெடுத்ததோடு கல்லாக்கிய கல்மனங்கொண்ட காமாந்தகாரன் தேவர்கள் எப்பேர்ப்பட்ட ஒழுக்கங் கெட்டவர்கள் என்பதற்கு இந்தப் புராணமே போதும்.

கௌதம முனிவர் மனைவி அகலிகை. சிறந்த அழகி. கற்புக்கரசி.தேவலோகம் சென்ற நாரதர் இந்திரனிடம் அகலிகை என்னும் அழகியைப் பற்றி வருணித்தார். இதனால் மதி மயங்கிய இந்திரன் அவளை அடைய ஒரு சூழ்ச்சி செய்தான்.முனிவர்கள் விடியற்காலையில் ஆற்றுக்குச் சென்று நீராடி ஜபதபங்கள் செய்வது வழக்கம். இதை அறிந்திருந்த இந்திரன் அந்த நேரத்தில் அகலிகையை அடைய எண்ணினான்.கவுதமர் ஆசிரமத்தை அடைந்த இந்திரன் நடு ஜாமத்தில் சேவலைப் போலக் கூவி கவுதமரை ஏமாறச் செய்தான். அது அதிகாலை என்று எண்ணிய கவுதமர் ஜபதபங்களை முடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் ஆற்றுக்கு நீராடச் சென்றார்.அவ்வமயம் இந்திரன், கவுதமர் வடிவில் ஆசிரமத்தில் நுழைந்தான். தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்த அகலிகை கவுதமர் திரும்பி வந்து விட்டதாக எண்ணினாள். அப்போது கவுதமர் வடிவில் இருந்த இந்திரன், ``இன்னும் விடியவில்லை. ஏதோ பறவையின் ஒலியைச் சேவல் கூவியதாக எண்ணினேன்’ என்று கூறி அவளை அருகில் வருமாறு அழைத்தான்.அருகில் கட்டிலில் அமர்ந்த அகலிகையுடன் சேர்ந்து இன்பம் துய்த்தான்.இந்நிலையில் ஆற்றங்கரை சென்ற கவுதமர் ஏதோ தவறு நேர்ந்து விட்டிருப்பதாகக் குழப்பத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்து கதவைத் தட்டினார். அக்குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அகலிகை திகைப்படைந்து நடுக்குற்றாள். ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தாள். இந்திரன் சுயஉருவில் தோன்றி அவள் காலில் விழுந்து கும்பிட்டான். தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினான்.கதவைத் திறந்த அகலிகை தலைவிரிகோலமாக முனிவர் காலில் விழுந்துவணங்கி தன் புனிதத் தன்மையை இந்திரனால் இழந்ததாகக் கூறித் தன்னை மன்னிக்குமாறு பிரார்த்தித்தாள்.ஞானதிருஷ்டியால் நிகழ்ந்தது

அனைத்தையும் அறிந்த கவுதமர், பூனை உருவில் தப்பிக்க முயன்ற இந்திரனைக் கோபமாக அழைத்தார். அவர் கோபத்துக்கு அஞ்சிய இந்திரன் சுயஉருவில் தலை குனிந்து நின்றான்.எனினும் கோபம் அடங்காத முனிவர் அவன் உடம்பெல்லாம் பெண் குறியாகட்டும்’ என்றும் `வெளியில் தலைகாட்ட முடியாமல் அவதிப்படு’ என்றும் சபித்தார்.அகலிகையை நோக்கிக் கணவனுக்கும், அயலானுக்கும் வேறுபாடு அறியாத அவள் உடம்பு கல்லாகுமாறு சபித்தார் முனிவர். அகலிகை தெரியாமல் செய்த பாவத்துக்கு விமோசனம் அளிக்குமாறு வேண்டினாள். அப்போது முனிவர் `சிறீமந் நாராயணன் ராமனாக அவதரித்து விசுவாமித்திரருடைய யாகத்தை நிறைவேற்ற கானகத்துக்கு வருவார். அந்த ராமர் பாதம் பட்டு சாபம் நீங்கி சுய உருவைப் பெறுவாய்’’ என்று கூறிவிட்டு வெளியேறினார் முனிவர்.சாபத்தின் காரணமாக இந்திரன் மறைந்து வாழ வேண்டிய அவல நிலை உண்டாயிற்று. இந்திரனுக்காகத் தேவர்கள் கவுதம முனிவரிடம் சென்று மன்னிப்புக் கோரினர். முனிவர் `இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானுடைய ஷடாட்சர மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிக்கட்டும்’’ என்று கூறினார்.

இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானின் ஷடாட்சர மந்திர உபதேசம் பெற்று ஜபித்து அவர் அருளால் அவன் உடலில் இருந்து பெண்குறிகள் கண்களாக மாறிக் காட்சி அளித்தன.எனவே அவனுக்கு ஆயிரம் கண்ணுடையான் என்ற பெயர் ஏற்பட்டது. (விடுதலை 19.05.2007)

விநாயகன் திருமணம் ஆனதா? அல்லது பிரம்மசாரியா? குழப்புகிறார்கள் புராணத்தில்

விநாயகன் திருமணம் ஆனதா? அல்லது பிரம்மசாரியா? குழப்புகிறார்கள் புராணத்தில் சு. அறிவுக்கரசு

முருகன், விநாயகன் இவர்களில் யாருக்குத் திருமணம் செய்வது என்பது குறித்தான போட்டியை சிவன் செய்ததாம். யார் உலகை முதலில் சுற்றி வருகிறதோ அதற்கே திருமணம் என்கிற போட்டியாம். மயிலில் ஏறி உலகைச் சுற்றிய முருகன் வந்து சேர்வதற்குள் கணபதி அம்மாவையும் அப்பாவையும் சுற்றி வந்து வெற்றி பெற்றதாம். இதனால் கோபமடைந்த முருகன் மலை மேல் ஏறிக் கொண்டதாகவும் ஒரு புராணக் கதை உண்டு. ]

தன் அம்மாவைப் போன்ற பெண்தான் தனக்கு மனைவியாக வர வேண்டும் என்று கணபதி விரும்பியதாகவும் பொருத்தமானப் பெண் தேடி குளத்தங் கரையில் குந்தியிருப்பதாகவும் ஒரு கதை உண்டு. பெண் கிடைக்க வில்லையாம். திருமணமும் ஆகவில்லையாம்.

ஆனால், நாரத புராணம் வேறு கதை கூறுகிறது. விநாயகன் பிரமனின் முன் தோன்றி பிரமனுக்கு இரண்டு வரங்களைத் தந்ததாம். கிரியா சக்தியையும் ஞானசக்தியையும் தந்ததாம். புராணம் கூறுகிறது:
இரு சக்திகளும் சித்தி, புத்தி என்ற பெயரில் பிரமனது இரண்டு பெண்களாக வளர்ந்தனர். அவர்கள் திருமணப் பருவம் அடைய, அவர்களை அவர்களின் விருப்பப்படி கணநாதனுக்கே திருமணம் செய்து வைக்க பிரமன் உளங்கொண்டார்.

ஒருநாள் நாரதர் தந்தையைக் காண வந்தவர் சித்தி, புத்திகளைக் கண்டு செய்தி அறிந்து அவர்கள் கோரியபடி திருமண ஏற்பாட்டிற்காக கைலாயம் சென்று விநாயகரை வணங்கி சித்தி புத்திகளுடைய கோரிக்கையையும், பிரம்மனின் விருப்பத்தையும் கூறி, அவர்களை மனம் உவந்து ஏற்றுக் கொள்ளுமாறு பிரமன் வேண்டியதாகக் கூறினார். விநாயகரும் தன் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்தி ஒப்புதல் தந்தார்.

நாரதர் சத்தியலோகம் சென்று தந்தையிடமும், சித்தி, புத்தியிடமும் விநாயகர் சம்மத்தைக் கூற, பிரமதேவன் பெரு மகிழ்ச்சியுற்று, கைலாயம் சென்று சிவபெருமான், பார்வதியிடம் தன் புத்திரிகளான சித்தி, புத்திகளைக் கணபதிக்குத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்டிட அம்மையும் அப்பனும் அதனை ஏற்றனர்.

விசுவகர்மா திருமண மண்டபம் அமைத்திட, கற்பகத் தருவும், காமதேனுவும் வாரி வழங்கினர். அம்மையப்பருடன் கணநாதர் வந்து சேர்ந்தார். அவர்களை அரியும், அயனும் எதிர்கொண்டு அழைத்துச் சென்று அமரச் செய்தனர். பிரமன், சித்தி, புத்தி இருவரையும் விநாயகருக்குக் கன்யாதானம் செய்து கொடுத்தார். திருமணம் இனிதே நடந்தது. அரி, அயன், அலை மகள், கலைமகள் மற்றும் இந்திராதி தேவர்கள் வாழ்த்திட அது ஒரு கண் கொள்ளாக் காட்சியாக அமைந்தது.நாரதன் கலகம் நன்மையில் முடியும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். (விடுதலை 19.05.2007)

பிணத்தைத் தின்கிறார், பூசாரி!

இந்து மதத்தின் மூன்று முக்கியக் கடவுள்களில் ஒன்று சிவன். ஆண் குறியும், பெண் குறியும் சேர்ந்த லிங்க வடிவில் தான் இது வணங்கப்படுகிறது. சிதம்பரத்தில் நாட்டியம் ஆடும் பொம்மையைச் செய்து வைத்துக் கும்பிடுவார்கள்.

இந்தக் கடவுளைப்பற்றிப் பாடும்போது புலித் தோலை இடுப்பில் கட்டிச் சுடுகாட்டுச் சாம்பலை உடல் முழுக்கப் பூசி, மண்டையோட்டு மாலையை அணிந்திருக்கும் சுடலையாண்டி என்பார்கள். அதை மெய்ப்பிப்பதற்காக ஒரு விழா - சிவன் ராத்திரி அன்றைக்கு! அத்துடன் கூட மயானக் கொள்ளை, அங்காள பரமேசுவரி விழா என்றெல்லாம் சில ஊர்களில் கொண்டாடப்படுவது உண்டு.

கோவையை அடுத்த சுண்டக்காமுத்தூரில் சுடுகாட்டு எலும்பைப் பொறுக்கிக் கடிக்கும் நிகழ்ச்சி இந்த ஆண்டு பகுத்தறிவாளர் ஆட்சியில் நடை பெறவில்லை. காவல் துறை மிகவும் விழிப்புடன் இருந்து தடுத்து நிறுத்தப்பட்டு விட்டது. கடவுள் சிவன், கழுத்தை அறுத்துக் கொள்ளவில்லையே!ஆனாலும், செய்தி வருகிறது - திருச்சிக்குப் பக்கத்தில் அங்காளபரமேசுவரியின் கோயிலில் சுண்டக்காமுத்தூரைவிட மோசமான, காட்டு விலங்காண்டித் தனமான விழா நடத்தப்பட்டதாம்.பூக்குளம் என்ற ஊரில் சுடு காட்டில் நடு இரவு 12 மணிக்குக் கோயில் பூசாரி பெண் வேடம் போட்டு (அம்பாளாம்) சூலத்தைத் தூக்கிக் கொண்டு போய் எரியும் பிணத்தைக் குத்தி, வெந்த மனிதக் கறியை தின்றானாம்.

பிறகு பூசை செய்கிறானாம். சுடுகாட்டு எலும்புகளைக் குவித்து வைத்து, முறுக்கு, சீடை தின்பதுபோல் தின்றானாம். அவன் தூக்கி எறியும் எலும்புகளை (பக்த) மனித நாய்கள் கவ்விப் பிடித்துப் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டனவாம்.எந்தப் பிணத்தைப் பூசாரி தின்றானோ அந்தப் பிணத்தின் உறவினர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வார்கள் என்று கதை கட்டி விட்டார்கள்.

எலும்பைப் பொறுக்கியவர்கள் அந்த எலும்பைக் கும்பிட்டால், எந்தச் சிக்கலும் பிரச்சினையும் தீர்ந்துவிடுமாம். ஆகவே, எலும்பைப் பொறுக்குவதில் போட்டி அடிதடி, மண்டை உடைபடுவது எல்லாம் உண்டாம்.இந்த விழா தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றிப் பிழைப்பதற்காகவே கொண்டாடப்படுகிறது என்பது கூடுதல் கொடுமை. இந்தக் காட்டு விலங்காண்டித்தனம் நடந்தது இந்த ஆண்டோடு முடிவடைந்தது என்கிற வரலாறைப் படைக்கவேண்டும். திருச்சிக் காவல்துறையினர் செயல் படுவார்களா?``வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல், கழுத்து போயினும் கைக்கொள்ள வேண்டா.ம்’’ (விடுதலை 18.05.2007)

கடவுளும் விபச்சாரம் செய்யக் கூடியதுதான்’’ என்று கூறியுள்ளார் -- காந்தியார்.---

கடவுளும் விபச்சாரம் செய்யக் கூடியதுதான்’’ என்று கூறியுள்ளார் -- காந்தியார்.---

நாமோ எனின் மதத்தின் ஆதிக்கத்தின், கடவுளின் பெயரால் கொள்ளையடிப்பவர்களுக்காக வாழவேண்டி இருக்கிறது.’’ பெரியார். தந்தை பெரியார் அறிவுரை.``காந்தியார் ஆயிரம் புரட்டு, பித்தலாட்டம் பேசி இருந்தாலும், ஏதோ தவறி ஓர் இடத்தில் உண்மையையும் கூறி இருக்கின்றார்.

``இந்தக் கோயில்கள் எல்லாம் விபச்சார விடுதி’’ என்றார்.பார்ப்பான் திட்டினான். ``உன் கோயில் மட்டும் அல்ல, உன் கடவுளும் விபச்சாரம் செய்யக் கூடியதுதான்’’ என்று கூறியுள்ளார்.’’ (விடுதலை 13.5.1959)

தந்தை பெரியார் அறிவுரை----மதமும்- கடவுளும்!``நம்முடைய மதமும், கடவுளும் நம் மக்களுக்கு ஏற்பட்டதாக இல்லை. மற்ற மதங்களும், மதப் பெரியார்களும் அந்தந்த மக்களுக்காக இருக்கின்றன. நாமோ எனின் மதத்தின் ஆதிக்கத்தின், கடவுளின் பெயரால் கொள்ளையடிப்பவர்களுக்காக வாழவேண்டி இருக்கிறது.’’ (விடுதலை 20.6.1958)

மடமையை வளர்த்துக் காசு பார்க்கிறார்கள் பனிலிங்கம் என்று மோசடி செய்து

மடமையை வளர்த்துக் காசு பார்க்கிறார்கள் பனிலிங்கம் என்று மோசடி செய்து . - சு.அறிவுகரசு

பனி லிங்கம். கடந்த ஆண்டு இது சரிவர உருவாகவில்லை ஏன்? என்ன தெய்வக் குற்றம்? பனிலிங்கம் என்று மோசடி செய்து மடமையை வளர்த்துக் காசு பார்க்கிறார்கள்.அமர்நாத் பனி லிங்கம். ஆண்டுதோறும் இதைப் பார்க்க ஆயிரக்கணக்கில் இந்து மதப் பக்தர்கள் கூடுகின்றனர். என்ன அதிசயம் இதில்? ஆம், அதிசயம் என்கின்றனர். பனியால் லிங்கம் தானாகவே சுயம்புவாகவே உருவாகிறது என்கிறார்கள். பின்னர் கரைந்துவிடும் போல !

இனிமேல் ராமன் உங்களுக்குக் கை கொடுக்கமாட்டான்.

அணில் சிலிர்த்தவுடன் பாலமா? இனிமேல் ராமன் உங்களுக்குக் கை கொடுக்கமாட்டான். பதவி இழந்தவர்கள் ராமன் பெயரைச் சொல்லிஅரசியல் நடத்த - கிளர்ச்சி செய்யப் பார்க்கிறார்கள்-தமிழர் தலைவர் எச்சரிக்கை விடுத்துப் பேச்சு